முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்காவிற்கு மூச்சுத் திணறல்

புதன்கிழமை, 4 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

மும்பை, ஜூலை.- 4 - பழம்பெரும் இந்தி நடிகரும், பா.ஜ.க. முன்னாள் அமைச்சருமான சத்ருஹன்சின்காவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மகராஷ்ட்ரா மாநிலம் கோகிலேபன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டார்.  அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினியைப் போலவே பாலிவுட் திரையுலகில் ஸ்டைல் மன்னனாக திகழ்ந்தவர் தான் சத்ருஹன்சின்கா. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. மும்பையில் உள்ள இவரது இல்லத்தில் பெயிண்ட் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் ச்திருகன் சின்ஹாவிற்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாம். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உல்நிலை தேறிவருகிறது. சின்ஹாவுடன் அவரது மகளும் நடிகையுமான சோனாக்ஷி உடனிருந்து தன் தந்தையை கவனித்து வருகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்