முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் கோவிலுக்கு 4,775 பக்தர்கள் புனித பயணம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர், ஜுலை 6 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு நேற்று மேலும் ஒரு புதிய அணியாக 4775 பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டனர். காஷ்மீரின் தென்பகுதியில் இமயமலைப் பகுதியில் 3,889 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த ஜுன் 25 ஆம் தேதி துவங்கியது. இந்த யாத்திரை வருகிற ஆகஸ்ட்டு 2 ஆம் தேதி நிறைவடைகிறது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை ஜம்மு அடிவாரத்தில் இருந்து மேலும் ஒரு புதிய அணியாக 4,775 பக்தர்கள் அமர்நாத் புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் 3,436 பேர் ஆண்கள். 1,097 பேர் பெண்கள். 95 பேர் குழந்தைகள். 147 பேர் சாதுக்கள். இவர்கள் 149 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். அமர்நாத் கோவில் செல்லும் வழியில் பக்தர்களின் வசதிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்