முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க இடகுத்தகை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்தின் காலி இடத்தை குறைந்த தொகைக்கு குத்தகை விட்டது தொடர்பாக 1 வாரத்திற்குள் பதிலளிக்க நடிகர் சங்கத்தின் சாரிடல்பிஸ் டரஸ்ட்க்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு - பிறப்பித்துள்ளது. நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பூச்சி முருகன் மற்றும் காமொய்தீன் சென்னை உயர் நீதி மன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில்  கூறியிருப்பதாவது:​-

சென்னை தி.நகரில்  அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்தின் 18 கிரவுண்டு மற்றும் 2067 சதுரஅடி பரப்புள்ள இடத்தை எஸ்.பி.ஐ சினிமா பிரைவேட் லிமிடெட்க்கு ரூபாய் 5 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு, வருடத்திற்கு ரூ.1000 மட்டும் பெற்று கொள்வதாக குத்தகைக்கு விட ஒப்பந்தம்,6.8.2010 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த முடிவை ஆட்சி மன்ற குழுவுடனும் மற்றும் சங்க உறுப்பினர்கள்  இடமும் கலந்து அலோசிக்காமல் எடுத்த முடிவாகும்.

நகரின் மைய பகுதியில் உள்ள அந்த இடமானது ரூ.150 கோடி மதிப்புள்ள இடம் அந்த இடத்தை 99 வருடத்திற்கு குறைந்த குத்தகைக்கு விடப்பட்டது சட்டவிரோதமானது. ஆகையால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் கடந்த 17.2.2011 அன்று இந்த குத்தகை தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம்  சங்கத்தின் தலைவர்  சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.அவர் உடனடியாக அவசரமாக கூட்டப்பட்ட பொது குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக  மனுவில் தெரிவித்திருந்தார்.

இதன் மீதான வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வந்தது. அப்பொழுது நீதிபதி இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க நடிகர் சங்க சாரிடபில் டிரஸ்ட் , நடிகர் சரத்குமார், நடிகர் ராதாரவி, எஸ்.பி. ஐ சினிமா பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago