முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

145-வது பிறந்த நாளை கொண்டாடிய கனடா மக்கள்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

ஒட்டாவா, ஜூலை. 6 - கனடா நாட்டின் 145 வது பிறந்த நாளை ஒட்டாவா மாகாணத்தில் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். கனடா நாட்டின் 145வது பிறந்த நாள் கடந்த 1 ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் கட்டிடங்களுக்கு நாட்டின் தேசிய வண்ணங்களான வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.

தலைநகர் ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டனும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கொண்டாட்டத்தின்போது ஸ்டீபன் ஹார்ப்பர் கூறுகையில், 

வளர்ந்து வரும் பொருளாதரம் உள்ள நாட்டில் இருப்பதில் நாம் பெருமைப் பட வேண்டும். கனடா தன் மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டது. ராணுவம், காவல்துறை, மீட்புப்பணியில் உள்ளவர்களின் வீரமும், சேவையும் மகத்தானது என்றார். பார்லிமென்ட் ஹில்லில் நடந்த கொண்டாட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு கனடா பிறந்தநாளின்போது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது பார்லிமென்ட் ஹில்லில் 3 லட்சம் பேர் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் நயாக்ரா பகுதி அதாவது தற்போதைய டொரண்டோ மீது கடந்த 1812ம் ஆண்டு அமெரிக்கா படையெடுத்தது. ஆனால் அமெரிக்கப் படை தோற்கடிக்கப்பட்டது. இந்த போர் நடந்து இந்த ஆண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதமாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்