முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவுக்கு மாஜி பிரான்ஸ் அதிபர் தப்பியோட்டம்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

மொன்ட்ரியல், ஜூலை. 6 - பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின்போது முறைகேடாக நிதி திரட்டிய புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி தமது மனைவி கர்லா புரூனியுடன் கனடாவில் தஞ்சமடைந்திருக்கிறார். பிரான்ஸ் அதிபரான சர்கோசி, கடந்த 2007-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பணக்காரரான லிலியான் என்பவரிடம் முறைகேடாக தேர்தல் நிதி திரட்டியதாக புகார் கூறப்பட்டது. அவர் பதவி வகித்த காலத்தில் இந்த புகார் எழுந்தது. ஆனால் இதை மறுத்த சர்கோசி, தாம் அதிபர் என்பதால் தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். தாம் பதவி காலத்தில் இருக்கும் வரை வழக்கு விசாரணைக்கு தடையும் கோரி இருந்தார்.

இந்நிலையில் புதிய அதிபர் பதவி ஏற்ற நிலையில் பாரீஸில் உள்ள சர்கோசியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையின் போது சர்கோசி அந்த வீட்டில் இல்லை. போலீசார் வருவதற்கு முன்பாகவே அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது கனடாவில் மனைவியுடன் தஞ்சமடைந்திருக்கும் சர்கோசி, கனேடிய தொழிலதிபரான பால் டெஸ்மராஸ் வீட்டில் அகதியாக தஞ்சம் அடைந்திருக்கிறார். கனேடிய தொழிலதிபர் பால் டெஸ்மராஸால்தான் தாம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெல்ல முடிந்தது என்று ஏற்கெனவே பல முறை சர்கோசி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்