முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எம்.கிருஷ்ணாவின் பாக்., பயணம் தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுலை 6 - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணம் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்த நல்லெண்ண  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி அபு ஜுண்டால் விவகாரம் முக்கிய இடத்தை பிடித்தது. இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த மாதம் பாகிஸ்தான் பயணம் செய்வதாக இருந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ருடன் அவர் பேச்சுநடத்த இருந்த நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பாகிஸ்தான் பயணம் நேற்று திடீரென தள்ளிவைக்கப்பட்டது. வருகிற 19 ம் தேதி கிருஷ்ணா பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக வருகிற ஆகஸ்ட்டு மாதம் 3வது அல்லது 4 வது வாரத்தில் அவர் பாகிஸ்தான் பயணம் செய்வார் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. 

இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சு கடந்த இரு நாட்களாக டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago