முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப்பதிவு நேரம் குறைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.2 - நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை ஏழுமணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு இம்முறை 8 மணிக்கு துவங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேர். பெண்கள் எண்ணிக்கை 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேர். திருநங்கையர்கள் 844 பேர். ஓட்டுப் போடுவதற்காக 234 தொகுதிகளிலும் மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 70 ஆயிரத்து 4 கட்டுப்பாடு எந்திரங்களும், 98 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராக உள்ளன. 2 லட்சத்து 76 ஆயிரத்து 510 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் இந்தமுறை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த வாக்குப்பதிவின்போது மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 9 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-

தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தை மத்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்தது. அதன்படி வருகிற சட்டசபை தேர்தலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இதே நேரம்தான் இருந்துள்ளது. பின்னர்தான் 7 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் 8 மணி முதல் வாக்களிக்க வேண்டும் என்று நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்