முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் சிக்கிய பயணிகளை ஏர்-இந்தியா விமானம் மீட்டது

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுலை 10 - பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகளை மீட்கச்சென்ற ஏர் இந்தியாவின்  மீட்பு விமானம் ஒன்று  பயணிகளுடன் டெல்லி திரும்பியது. நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து 128 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தது. அப்போது அந்த ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென்று  கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் நவாபாஷா என்ற விமான நிலையத்தில்  பாகிஸ்தான் அதிகாரிகளின் அனுமதி பெற்று அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் டெல்லியில் உள்ள ஏர் இந்தியா விமான போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து பாகிஸ்தானில் சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்டுக் கொண்டுவருவதற்காக நேற்று முற்பகலில் ஏர் இந்தியாவின் மீட்பு விமானம் ஒன்று நவபாஷா விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு சிக்கித்தவித்த ஏர் இந்தியா பயணிகளை மீட்டுக்கொண்டு ஏர் இந்தியாவின் மீட்டு விமானம் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது. 

இந்த மீட்பு விமானத்திற்கு சில நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டி இருந்ததால் இந்த விமானம் நேற்று முற்பகலில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக பாகிஸ்தான் புறப்பட்டுச்சென்றது. டெல்லி திரும்பிய ஏர் இந்தியா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். தாங்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பாகிஸ்தானில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்