முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 4 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் புறப்பட்டு சென்றனர்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஜம்மு, ஜுலை 10 - அமர்நாத் கோவிலுக்கு நேற்று மேலும் ஒரு புதிய அணியாக 4,025 பக்தர்கள் புறப்பட்டுச் சென்றனர். காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை சென்று அங்குள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 25 ம் தேதி துவங்கியது. வருகிற ஆகஸ்டு 2 ம் தேதிவரை இந்த யாத்திரை நீடிக்கும். ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் அமர்நாத் கோவிலுக்கு சென்று பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். நேற்று மேலும் ஒரு புதிய அணியாக 4,025 பக்தர்கள் ஜம்மு நகரின் அடிவார பகுதியில் உள்ள பகவதி நகரில் இருந்து அமர்நாத் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் 2,761 பேர் ஆண்கள். 999 பேர் பெண்கள். 65 பேர் குழந்தைகள். 200 பேர் சாதுக்கள். இவர்கள் 129 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். அமர்நாத் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்களை ஜம்மு அடிவார முகாமில் உள்ள ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago