முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேமரூன் கட்சியில் இருந்து 81,000 பேர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

லண்டன், ஜூலை, 10  - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பின் சுமார் 81 ஆயிரம் பேர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். கேமரூன் 2005 ம் ஆண்டில் கட்சியின் தலைவரானார். அடுத்த 6 ஆண்டுகளில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து ஏராளமானோர் விலகி உள்ளனர். பிரிட்டனின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இப்போது சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். கட்சியின் தலைவராக கேமரூன் பொறுப்பேற்ற போது இந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 58 ஆயிரமாக இருந்தது. பிரிட்டன் பிரதமராக 2011 மே மாதம் டேவிட்கேமரூன் பதவியேற்றார். இதே காலகட்டத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியில் இருந்து 4 ஆயிரம் பேர் மட்டுமே விலகி உள்ளனர். இப்போது அக்கட்சியில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். மற்றொரு முக்கிய கட்சியான லிப்ரல் டெமாக்ரடிக் கட்சியில் 65 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். 2005 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கட்சியில் இருந்து 8 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். அதே நேரத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக 3 கட்சியினருமே தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago