முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய கலவரத்தில் 115 பேர் பலி

புதன்கிழமை, 11 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

அபுஜா, ஜூலை. 11  - நைஜீரியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த கலவரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிலாடியூ மாகாணத்தில் உள்ள பர்கிங்லாடி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கும், குடியேறிய புலானி இனத்தவருக்கும் இடையே நடந்த கலவரத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது துப்பாக்கிகளுடன் புகுந்த புலானி இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். 

இதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் சுமார் 115 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து பிலாடியூ பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான போஹோ ஹராம் நடத்தியிருப்பதாக தெரியவில்லை என்று அரசு வட்டாரம் கூறுகிறது. நைஜீரியாவின் வடக்கு பகுதியில் கிறிஸ்தவர்களும், தெற்கு பகுதியில் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அங்கு முஸ்லீம் மதத்தின் சட்டங்களை நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று அடிக்கடி சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago