முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 2013-ல் ஆசிய தடகள போட்டி: அமைச்சர்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - தமிழ்நாட்டில் 2013 ஆகஸ்டில் ஆசிய அளவிலான தடகள போட்டி நடைபெறும். அதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 44 நாடுகள் கலந்து கொள்ளும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார். 39வது ஜூனியர் தேசிய நீச்சல் சேம்பியன் சிப் போட்டி நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. நிகழ்ச்சியை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தொடக்கி வைத்துப் பேசினார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:-

தமிழகத்தில் 3வது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த விளையாட்டுத் துறைக்கென ரூ.103 ஓதுக்கியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமையும் போதுதான் உண்மையிலேயே விளையாட்டு வீரர்களுக்கு பொற்காலம். கடந்த 2001- 2006 ஆட்சி காலத்தில்கூட தெற்காசிய விளையாட்டை நடத்தினார்.

மேலும் நேருஸ்டேடியத்தை கட்டி முடித்து நாட்டு மக்களுக்கும் குறிப்பாக விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஒரு சிறப்பான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.

அதேபோல் ஒலிம்பிக் போட்டியில் தமிழக விளையாட்டு வீரர்கள் பங்கேற்று பதக்கம் வென்றால், தங்கம் வென்றவருககு ரூ.2 கோடியும், வெள்ளி வென்றவருக்கு 1கோடியும், வெண்கலம் வென்றவருக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் ஆசிய மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றால் 50 லட்ச ரூபாயும் வெள்ளி வென்றால் 30 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்றால் 20 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்து விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகளுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அந்த வகையில் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் தடம் பதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

மேலும் 2013 ஆகஸ்டில் 44 நாடுகள் கலந்து கொள்ளக் கூடிய ஆசிய தடகள போட்டி தமிழ்நாட்டில் நடைபெறும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசினார்.

அதன் பின்னர் நீச்சல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

முன்னதாக தமிழ்நாடு நீச்சல் சங்கத் தலைவர் கோப்ரா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் செயலாளர் நயினார் அன்சாரி, துணைத் தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன், கமலேஷ் நானாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்