முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைபண்பாட்டு துறை செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இசைக்கல்லூரிகள், இசைப்பள்ளிகள், அரசு கவின்கலைக் கல்லூரிகள், அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், மாநில அரசின் மானியத்துடன் செயல்படுத்தப்படும்  திட்டங்களையும் நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், அரசு அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.   இக்கூட்டத்தில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வி.கு.ஜெயக்கொடி,  கலை பண்பாட்டுத்துறையின்  முதன்மைச் செயலாளருமான ஆணையருமான சோ.சு.ஜவஹர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் குமாரி பி.எஸ்.சச்சு, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகளின் கலையியல் அறிவுரைஞர் வீணை காயத்ரி, மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் ஷோபாசேகர்,  கட்டிட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி முதல்வர், இசைக்கல்லூரிகளின் முதல்வர்கள், கவின்கலைக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு.என்.ஆர்.சிவபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்