முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பார் ஊழியர்களாக பணியாற்றும் பட்டதாரிகள்!

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.13  - பொருளாதார பிரச்சனையால் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர்கள் வெயிட்டர்களாகவும், பார் ஊழியர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர். அமெரிக்காவில் பொருளாதார நிலை சரியில்லாததால் அங்கு படித்து பட்டம் பெற்றவர்களுக்கு படிப்புக்குரிய வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஹோட்டல்களில் வெயிட்டர்களாகவும், பார்களில் ஊழியர்களாகவும் வேலை பார்த்து பிழைப்பு நடத்துகின்றனர். இது குறித்து பட்டதாரியான மைக்கேல் பாம் என்பவர் கூறுகையில்,

நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பட்டப்படிப்பை முடித்தேன். அன்றில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து விட்டேன். ஆனால் முழு நேர வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிகாகோவில் உள்ள ஒரு கடையில் வெயிட்டராக வேலை பார்க்கிறேன். ஆசிரியராக பணியாற்றும் தகுதி இருந்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின்படி அம்மாதத்தில் 8.2 மில்லியன் மக்கள் பகுதிநேர வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் கம்ப்யூட்டர் சயன்ஸ், என்ஜினியரிங் மற்றும் அகெளண்ட்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு அமெரிக்காவில் கிராக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்