முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. வீரர் பிரட்லீ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

சனிக்கிழமை, 14 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜூலை. 14 - ஆஸ்திரேலிய மூத்த வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு - 35 வயதான வேகப் புயலான பிரட்லீ 13 வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற பிறகு ஓய்வு பெற்று இருக்கிறார். அவர் பல வருடங்கள் கா யத்தினால் அவதிப்பட்டார். 

பிரட்லீ கடந்த 2 வருடத்திற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெ ற்றார். அப்போது ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 4-வ து வீரராகத் திகழ்ந்தார். 

ஆஸி. வேகப் பந்து வீச்சிற்கு தலைமை தாங்கிய பிரட்லீ டெஸ்டில் மொத்தம் 310 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதற்கு முன்பாக ஷேன் வார்னே 708 விக்கெட்டையும், கிளன் மெக்ராத் 563 விக்கெட்டையும் , டென்னிஸ் லில்லீ 355 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 

யார் வேகமாக பந்து வீசுவது என்பதில் பாகிஸ்தான் முரண்பாட்டு வீரரான சோயிப் அக்தருக்கும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான பிரட்லீக்கும் இடை யே போட்டி நிலவி வந்தது நினைவு கூறத்தக்கது. 

கடந்த 2005-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நேப்பியரில் நடந்த டெஸ்டில் 99.9 மைல் (160.8.கி.மீ) வேகத் தில் பிரட்லீ பந்து வீசி சாதனை படைத் தார். இது 2-வது அதிவேகமாக வீசப்ப ட்ட பந்தாக சாதனையானது. 

தொடர்ந்து 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதால் பிரட்லீ மன அழுத்தம் மற்றும் காயத்தால் அடிக்கடி அவதிப் பட்டார். இதனால் பந்து வீசும் முறையை அவர் மாற்ற வேண்டியதாயிற்று.

தனது வேகமான பந்துவீச்சாலும், இன் சுவிங் யார்க்கர்களாலும், பேட்ஸ்மேன் களை அதிகம் தொந்தரவிற்கு ஆளாக்கி னார் பிரட்லீ. இருந்த போதிலும், அவ ர் உணர்ச்சி வசப்படாமல் புன்சிரிப்பு டன் காணப்படுவார். 

கடந்த 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணி 18 வருட இடைவெளிக்குப் பிறகு ஆஷஸ் தொடரை வென்று சாதனை படைத்தது. அப்போது இங்கி. ஆல்ரவு ண்டரான ஆன்ட்ரூ பிளிண்டாப்,சிறப் பாக பந்து வீசி வரும் பிரட்லீயை பா ராட்டினார். 

கடந்த 2010 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரட்லீ டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஆனாலும் தொடர்ந்து இடைஇடையே காயம் அடைந்து வந்தார். 

லீ 220 ஒரு நாள் போட்டிகளில் பங்கு கொண்டு மொத்தம் 380 விக்கெட்டைக் கைப்பற்றினார். 25 , 20-க்கு 20 போட்டி யில் விளையாடி மொத்தம் 28 விக்கெ ட்டை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்