முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 200 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

அபுஜா, ஜூலை. 15 - நைஜீரியா நாட்டில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீ பிடித்து வெடித்ததில் 200 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் தென்பிராந்தியத்திலுள்ள ரிவர்ஸ் மாநிலத்தில் கிராமம் ஒன்றின் வழியாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவ ஏராளமானோர் பெட்ரோலை பிடிப்பதற்காக திரண்டனர். இன்னும் பலர் வாகனங்களைக் கொண்டு வந்தும் பெட்ரோரலை சேகரித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் லாரி தீப் பிடித்து வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 95 பேர் இறந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்