முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவழியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் சென்றார்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

பைகோனூர்,ஜூலை.- 16 - அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட விண்கலத்தில் ஜப்பான், ரஷ்யா வீரர்களுடன் இந்திய வம்சாவழியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் புறப்பட்டு சென்றார். இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராகங்கனை சுனிதா வில்லியம்சுக்கு 46 வயதாகிறது. இவர் கடந்த 2006-ம் ஆண்டு விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தவர் என்ற சாதனையை படைத்தவர். இவர் விண்வெளியில் தங்கியிருந்த நாட்கள் 195 ஆகும். இவரை மீண்டும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப அமெரிக்காவின் நாசா நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக அவருக்கு கடந்த சில மாதங்களாக சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. சுனிதாவுடன் ஜப்பான் நாட்டை சேர்ந்த அஹிகிகோ கோஷிடி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த யூரிமலன்ஷென்கோ ஆகியோரும் தேர்வாகி இருந்தனர். அவர்களுக்கும் பலமாதங்களாக பயிற்சி கொடுக்கப்பட்டது.
விண்வெளி வீராங்கனை சுனிதா, அஹிகிகோ, யூரி ஆகிய மூவரும் நேற்று விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மூவரும் கஜகஜஸ்தான் நாட்டில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். இந்திய நேரப்படி நேற்றுக்காலை 8-10 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த விண்வெளி பயணத்தின் முக்கிய பொறியாளவாக சுனிதா பணியாற்றுவார். நேற்றும் இன்றும் தொடர்ந்து 2 நாட்கள் இந்த விண்கலம் பயணம் செய்யும். நாளை காலை சோயுஸ் விண்கலம், சர்வதேச ஆய்வுமையத்திற்கு சென்றடையும். தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, உள்பட பல நாடுகளை சேர்ந்த 32 விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களுடன் சுனிதா, அஹிகிகோ, யூரி ஆகிய 3 பேரும் சேர்ந்து கொள்வார்கள். அதன் பிறகு அந்த விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்பு கமாண்டர் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனிதாவும் அவருடைய ஆய்வுக்குழுவினரும் நவம்பர் மாதம் வரை விண்வெளிக்கூடத்தில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்