முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா

திங்கட்கிழமை, 16 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, ஜூலை. - 16 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வரும் 19 ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கி வரும் 29 ம் தேதி வரை நடைபெறுகிறது.  ஆடி முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 20 ம் தேதி காலை 9.41 மணி முதல் 10.45 மணிக்குள்கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 21 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி அன்ன வாகனத்திலும், 22 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்திலும் அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருள்கிறார்.  23 ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலஸ்தானம் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் ஆடிப்பூரம் ஏத்தி இறக்குதல் வைபவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு ஆடி வீதிகளில் அம்மன் சிம்மாசனத்தில் வலம் வருதலும், 24 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்திலும், 25 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு கிளி வாகனத்திலும் ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  தொடர்ந்து வரும் 25 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்தில் ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருகிறார். இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்ததும் உற்சவர் சன்னதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. 27 ம் தேதி காலை 9 மணிக்கு தங்க சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்திலும் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருகிறார். அன்றைய தினம் அருளாளர் சுந்தரர் குருபூஜை, சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் முறையே வெள்ளி, யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் உலா வருகின்றனர். பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாய காட்சியும் நடைபெறுகிறது. 28 ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சித்திரை வீதிகளில் சட்டத் தேரில் அம்மன் எழுந்தருளுகிறார். இரவு 7 மணிக்கு அம்மன் புஷ்ப வாகனத்தில் ஆடி வீதிகளில் உலா வருகிறார். இரவு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சைத்துயோபாச்சாரம் நடைபெறுகிறது. 29 ம் தேதி பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமாடியதும் விழா நிறைவு பெறுவதாக கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்