முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு தலைமுறை பிரச்சனைகளை விளக்கும் ``மகாராஜா''

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.2 - அழகிய அசுரா என்ற வித்தியாசமான படத்தை தயாரித்த ஜெ.ரவியின ஜெயராம் கிரியேஷன்ஸ் படநிறுவனம் அடுத்து நிறைந்த பொருட்செலவில் தயாரிக்கும் படம் மகாராஜா. இந்தப்படத்தில் சத்யா, நாசர் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். மற்றும் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக அனிதா நடிக்கிறார். சரன்யா, எம்.எஸ்.விஸ்வநாதன், கோவைசரளா, அஜெய்ரத்னம், ஸ்ரீலதா, பயில்வான் ரங்கநாதன், விஜய் கிருஷ்ணராஜ் இவர்களுடன் முதன்முறையாக பிரபல தெலுங்கு நடிகர் எம்.எஸ்.நாராயணன் தமிழில் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு வி.லஷ்மிபதி, இசை டி.இமான், பாடல்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், சினேகன், விவேகா, யுகபாரதி, டாக்டர் இருதயா, கலை வைரபாலன், எடிட்டிங் சாய்சுரேஷ், ஸ்டண்ட் பவர்டாஸ்ட், நடனம் தினா, கல்யாண், தயாரிப்பு மேற்பார்வை எம்.செந்தில்குமார், விஜய்லட்சுமணன், நிர்வாக தயாரிப்பாளர் ராமய்யா ராஜா, தயாரிப்பு டி.ரவி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டி.மனோஹரன். இவர் நடிக்கும் இயக்குனருமான அர்ஜுனிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கும் முதல்படம் இது. 

அர்ஜுனிடம் உதவியாளராக பணிபுரிந்தபோது கமர்ஷியலாக படம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டேன். அதன்படி இந்தப்படத்தில் சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்று எல்லா கலவையும் கலந்து கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறேன். நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இன்ஹைய இளைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளி கருத்து வேறுபாடுகளைப் பற்றிய கதைதான் மகாராஜா. அதனால் எல்லாதரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் படி நிச்சயம் இருக்கும் என்றார். படத்தின் இயக்குனர் டி.மனோஹரன். நடிகர் நாசர் கூறும்போது, என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில்  நான் ரசித்து நடித்த கதாபாத்திரத்திரம். காரணம் இதுவைர எனக்கு கிடைக்காத வேடம். வந்தோமா மேக்கப் போட்டோமா, நடிச்சோமா, போனோமா என்று இல்லாமல் கதாபாத்திரத்தை ரொம்பவும் ரசித்து நடித்த படம் மகாராஜா என்றார். விரைவில் வெளியாகும் மகாராஜா நிச்சியம் ரசிகர்களை மனதில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமரும் என்றார் தயாரிப்பாளர் ஜே.ரவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago