முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல்: ஆகஸ்ட் 14ல் அறிவிப்பு வெளியாகலாம்!

புதன்கிழமை, 18 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை. - 18 - பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப் பிரிவு) இரண்டும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தவும் அதற்காக தற்காலிக அரசு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தற்காலிக அரசின் பிரதமர் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சேராதவராக இருக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் வரை உள்ளது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள், மோசமான நிர்வாகம் காரணமாக ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி அளித்து வருவதால் நவம்பர் மாதமே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்