முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ்கண்ணா திடீர் மரணம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. - 19 - பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ்கண்ணா நேற்று திடீரென மரணமடைந்தார். 

கடந்த மாதம் 23 ம் தேதி அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மும்பையில் உள்ள நீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு 8 ம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மதியம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 69. 1980 களில் இந்தித் திரையுலகில் ராஜேஷ் கண்ணா கொடிகட்டி பறந்தார். அவர்தான் இந்தித் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். அவர் நடித்த ஆனந்த், ஆராதனா ஆகிய படங்கள் பெரும் வெற்றியை அடைந்தன. நடிகை டிம்பிள் கபாடியாவை ராஜேஷ்கண்ணா திருமணம் செய்துள்ளார். இவருக்கு டுவிங்கிள், ரிங்கி என 2 மகள்கள் உள்ளனர். பாரதிராஜா தனது சிகப்பு ரோஜாக்கள் படத்தை இந்தியில் ரெட்ரோஸ் என்ற பெயரில் ராஜேஷ்கண்ணாவை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தார். அவர் சிறந்த நடிகருக்கான விருதுகளை பல முறை பெற்றுள்ளார். மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்ட அவர் 1992 முதல் 96 ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்துள்ளார். அவரது உடல் தகனம் நேற்று மாலையே நடந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago