முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் மற்போர் வீரர் சுஷில்குமார் நம்பிக்கை

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை. - 19  - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக சண்டையிட்டு பதக்கம் வெல்வேன் என்று இந்தியாவின் முன்னணி மற் போர் வீரரான சுஷில் குமார் நம்பிக்கை தெரிவித்தார். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கடந்த முறை ஒலிம்பிக் போட்டி நடந் தது. இதில் மற்போர் பிரிவில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.  பெய்ஜிங் போட்டி போன்று லண்டன் ஒலிம்பிக்கிலும் சிறப்பாக பங்களித்து பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெரு மை சேர்ப்பேன் என்று சுஷில் குமார் தெரிவித்தார்.  ஆந்திராவில் உள்ள சாய் மையத்தில் லண்டன் ஒலிம்பிக்கிற்காக பயிற்சி பெ ற்று வந்த அவர்  இடையே நிருபர்களைச் சந்தித்த போது, ஒலிம்பிக் குறித்து மேற்கண்டவாறு கூறினார்.  மேலும் லண்டன் ஒலிம்பிக்கில் சிறப் பாக சண்டையிட்டு பதக்கம் பெற முய ற்சிப்பேன் என்றும், பதக்கத்தை நினைவில் வைத்து நெருக்கடிக்கு உள்ளாக மாட்டேன் என்றும் அவர் தெரிவி த்தார்.  இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இந்த மாதக் கடைசியில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளன. இதற்காக நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது..  லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெ ல்ல ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆயத்த மாகி வருகின்றனர். இதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெய்ஜி ங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது தனக்கு நம்பிக்கை அளித்து உள்ளதாகவும், கடந்த ஒலிம்பிக் சாத னையை இந்த ஒலிம்பிக்கில் முறியடிப் பேன் என்றும் குமார் நம்பிக்கை தெரி வித்தார்.  லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக கூறப்படும் தகவலையும் அவர் மறுத்து உள்ளார். தொடர்ந்து மற்போர் போட்டிகளில் கலந்து கொள்வேன் என்றும் அவர் கூறி னார்.  எனது உடல் ஒத்துழைக்கும் வரை நான் மற்போர் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என் றும் முன்னணி வீரரான சுஷில் குறிப் பிட்டார்.  சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கொலாராடோ ஸ்பிரிங்சில் மற்போர் வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடந்த து. இதில் இந்திய வீரர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வீரர் கள் பங்கேற்றனர். 

கொலாரடோ பயிற்சி முகாம் குறித்து சுஷில் கமாரிடம் கேட்ட போது, இந்த பயிற்சி முகாம் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. இதன் மூலம் எங்கள து வேகமும், ஆற்றலும் அதிகரித்தன என்றார் அவர். 

அடுத்து பெலாரசில் நடக்க இருக்கும் பயிற்சி முகாம் குறித்து அவரிடம் கேட்ட போது, இதில் தொழில் நுணுக்கங்க ளை விருத்தி செய்வோம் என்று 66 கிலோ பிரீஸ்டைல் எடைப் பிரிவில் போட்டியிடும் குமார் தெரிவித்தார்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago