முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகமீனவர் சுட்டுக்கொலை:விசாரணை விபரத்தை இந்தியாவுக்கு தெரிவிப்போம்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜூலை.- 19 - தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். விசாரணை வெளிப்படையாக இருப்பதோடு விசாரணையின் விபரத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் மீன்பிடிக்கும் பணியில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் அன்று துபாய் அருகே மீன்பிடித்துக்கொண்டியிருந்தபோது அமெரிக்க கப்பல் பாதுகாவலர்கள் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினத்தை சேர்ந்த சேகர் என்ற இளைஞர் பலியானார் மற்றும் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அமெரிக்கா நட்பு நாடாக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொச்சி கடலில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட மீனவர்களுக்கு மத்திய அரசானது இத்தாலியில் இருந்து நஷ்ட ஈடு வாங்கி தந்தது மாதிரி சேகர் குடும்பத்தினர்களுக்கும் அமெரிக்காவிடம் இருந்து நஷ்ட ஈடு வாங்கித்தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருப்பதோடு சேகர் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்கி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிக்கை தரும்படி ஐக்கிய அரபு நாடுகள் அரசையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில் சேகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேட்ரிக் வெண்ட்ரெல் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் லிட்டில் இதை தெரிவித்தார். விசாரணை வெளிப்படையாக இருக்கும் என்றும் விசாரணை விபரத்தை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வோம் என்றும் லிட்டில் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடாவில் மீன்பிடித்துக்கொண்டியிருந்த தமிழக மீனவர்களுக்கு அமெரிக்க கப்பல் பலமுறை எச்சரிக்கை விடுத்தது என்றும் அதையும் மீறி அவர்கள் வந்ததால்தான் படகை நோக்கி பாதுகாப்பாளர்கள் சுட்டனர் என்றும் பெண்டகன் பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.  இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுவோம் என்றும் விசாரணை முழுவிபரத்தையும் இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்வோம் என்றும் வெண்ட்ரெல் நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்