முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் மற்றும் பாக்.கிற்கு புதிய தூதர்கள்: அதிபர் ஒபாமா

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை. 20 - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களை அந்நாட்டு அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் தூதர்கள் பதவி விலகி 2 மாதங்களாகியும் தூதர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்டு ஓல்சன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐக்கிய அரபு எமிரேடுக்கான அமெரிக்க தூதராகப் பணிபுரிந்தவர். மேலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த பொருளாதார ஆலோசகராகவும் ஓல்சன் பணியாற்றினார்.

ஆப்கானிஸ்தானுக்கான புதிய தூதராக ஜேம்ஸ் கன்னிங்காம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காபூலில் துணை தூதராகப் பணியாற்றி வருகிறார். இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக இவர் பணிபுரிந்துள்ளார். இந்த நியமனங்களுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்த பிறகு, இருவரும் பதவி ஏற்றுக் கொள்வர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago