முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3800 மெட்ரிக் டன் அரிசி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.20 - ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார். 

அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு  வழங்கப்படும். 

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்