முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகளை மிரட்டிய தி.மு.க. சேர்மன் உட்பட 7 பேர் மீது வழக்கு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொடைக்கானல்,ஏப்.2  - கொடைக்கானலில் வாக்காளர்களுக்கு இலவச வேட்டி மற்றும் மப்ளர்களை வழங்கிய போது தடுத்த அதிகாரிகளை மிரட்டிய கொடைக்கானல் தி.மு.க. சேர்மன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பழனி தொகுதிக்குட்பட்டது. இத்தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார். நேற்று முன்தினம் இரவு தி.மு.க.வினர் கொடைக்கானல் ஒன்றிய தி.மு.க சேர்மன் அப்துல் ரசாக் தலைமையில் துணை சேர்மன் ஆர்.பி. கிருஷ்ணன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜதுரை உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் வாக்காளர்களுக்கு இலவசமாக வேஷ்டி, துண்டுகள் மற்றும் மப்ளர்களை வழங்கியதாக தெரிகிறது. 

இது குறித்து தகவலறிந்த மண்டல துணை வட்டாட்சியர் ஜான்பாஸ்டின் டக்லஸ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இலவச வேஷ்டிகள் மற்றும் பொருட்கள் விநியோகத்தை தடுத்தனர். அத்துடன் பறக்கும் படையினர் சோதனையிட்டு துரைராஜ், பொன்ராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் சோதனை செய்ததிலும் அங்கிருந்தும் வேஷ்டிகள், மப்ளர்களை கைப்பற்றினர். 

பறக்கும் படையினர் வந்து தி.மு.க.வினர் விநியோகித்த அந்த பொருட்களை கைப்பற்றுவதை தி.மு.க.ஒன்றிய சேர்மன் உள்ளிட்டோர் அதிகாரிகளை மிரட்டியதாக தெரிகிறது. 

பின்னர் பட்டாலியன் போலீசார் பூம்பாறை பகுதிக்கு வரவழைக்கப்பட்டு போலீசாரும் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றிய தி.மு.க. சேர்மன் அப்துல் ரசாக், துணை சேர்மன் கிருஷ்ணன், ராஜதுரை மற்றும் துரைராஜ், பொன்ராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தப்பியோடி விட்டனர். பூம்பாறைக்கு வேஷ்டி, மப்ளர்களை எடுத்து சென்ற வேனும் பறிமுதல் செய்யப்பட்டதோடு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதையொட்டி மண்டல துணை வட்டாட்சியர் ஜான் பாஸ்டின் டக்லஸ், கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் கொடைக்கானல் போலீசார் தி.மு.க ஒன்றிய சேர்மன் அப்துல்ரசாக், துணை சேர்மன் கிருஷ்ணன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜதுரை மற்றும் மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தி.மு.க.வினரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்