முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 கிரிக்கெட்: வங்கதேசம் 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெல்பாஸ்ட், ஜூலை. 20 - அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது 20-க்கு 20 போட்டியி ல் வங்கதேச அணி 71 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில், ஷாகிப் அல் ஹசன் அபார மாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந் தார். அவருக்கு பக்கபலமாக, ஜியாவுர் ரெஹ்மான், தமீம் இக்பால், மக்மதுல் லா மற்றும் மொகமது அஸ்ரப்புல் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, எலியாஸ் சன்னி சிறப்பாக பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவரு க்கு ஆதரவாக அப்துர் ரசாக், பந்து வீசி னார். 

வங்கதேச அணி கேப்டன் முஸ்பிகர் ரகீம் தலைமையில் அயர்லாந்தில் சுற் றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் போர்ட்டர் பீல்டு தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிக ளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி - 20 போட்டி நடத்த திட்டமிடப்ப ட்டது. இதன் முதல் போட்டி பெல்பா ஸ்ட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக் கெட் கிளப்பில் நடைபெற்றது. 

இதில் முதலில் களம் இறங்கிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 5 விக்கெட்டை இழந்து 190 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் 1 வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 33 பந்தில் 57 ரன்னை எடுத்தார். இதில் 9 பவு ண்டரி அடக்கம். ஜியாவுர் ரெஹ்மான் 17 பந்தில் 40 ரன்னை எடுத்து இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, தமீ ம் இக்பால் 31 பந்தில் 31 ரன்னையும், மக்மதுல்லா 23 ரன்னையும், மொகமது அஸ்ரப்புல் 15 ரன்னையும் எடுத்தனர். 

அயர்லாந்து அணி சார்பில் வேகப் பந் து வீச்சாளர் சொரன்சென் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஸ்டிர் லிங் 38 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ரேங்கின் 1 விக்கெட் எடுத்தார். 

அயர்லாந்து அணி 191 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற கடின இல க்கை வங்கதேச அணி வைத்தது.ஆனா   ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்னில்ஆட்டம் இழந்தது. 

இதனால் வங்கதேச அணி இந்த முதல் போட்டியில் 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

அயர்லாந்து அணி தரப்பில், வில்சன் அதிகபட்சமாக, 36 பந்தில் 48 ரன்னைஎடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கா மல் இருந்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் போர்ட்டர் பீல்டு 26 ரன்னையும், சொ  ரென்சன் 12 ரன்னையும், ஜாய்ஸ் 11 ரன் னையும் எடுத்தனர். 

வங்கதேச அணி சார்பில், எலியாஸ் சன்னி 13 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, அப்துர் ரசாக் 9 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக எலியாஸ் சன்னி தேர்வு செய்ய ப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்