முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான தொடர்: கேப்டன் தோனி பேட்டி

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 20 - இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் என்று கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் ஜெயவர்த்தனே தலைமையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி - 20போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் 21- ம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிகிறது. பின்பு 7 -ம் தேதி டி - 20 போட்டி நடக்கிறது. 

இலங்கை சென்றுள்ள இந்திய அணியி ன் கேப்டனான மகேந்திர சிங் தோனி தலைநகர் கொழும்புவில் நிருபர்களை ச் சந்தித்த போது, அவர்களது கேள்விக் கு பதில் அளிக்கையில் மேற்கண்டவா று தெரிவித்தார். 

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் முன்னேற்ற த்தை காட்டும். தவிர, இந்திய அணியி ன் பலவீனமான பகுதி எது என்பதையு ம் தெரியப்படுத்தும் என்றும் அவர் கூறி னார். 

இந்திய அணி இன்னும் சில பகுதிகளில் முன்னேற வேண்டி உள்ளது. இது குறித் து ஆலோசனை நடத்த இருக்கிறோம். இந்தத் தொடர் நமது அணியின் பலம் மற்றும் பலவீனத்தை சோதிக்க நல்ல சந்தர்ப்பமாகும். இதனைக் கண்டறிந்தா ல் அணி தொடர்ந்து வெற்றி பெற வழி பிறக்கும் என்றும் தோனி தெரிவித் தார். 

இலங்கையில் வரும் செப்டம்பர் மாத ம் டி - 20 உலகக் கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. ஆனால் தற்போ தைய நிலையில் ஒரு நாள் தொடரில் கவனம் செலுத்துவோம் என்றும் கேப் டன் கூறினார். 

டி - 20 உலகக் கோப்பைக்கான அணியி ல் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்தத் தொடரிலும் இடம் பெ ற்று உள்ளது நமக்கு நல்ல அம்சமாகும். எனவே உலகக் கோப்பை குறித்து இப் போது கவலை வேண்டாம் என்றும் தோனி தெரிவித்தார். 

சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்திய அணி கொழும்பு சென்றதும், பிரேமதாசா அர ங்கத்தில் பயிற்சியை மேற்கொண்டது. 

சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் பங்கு கொ ள்வதால் அவர்கள் புத்துணர்வுடன் உள்ளனர். எனவே இந்தத் தொடரில் இந்தி ய வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி தொடரைக் கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என்றும் தோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்