முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய அமைச்சர் சரத்பவர் சோனியாவுடன் திடீர்சந்திப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 21 - மத்திய அமைச்சரவையில் விவசாய அமைச்சர் சரத்பவாருக்கு இரண்டாவது கிடைக்கலாம் என்று தெரிகிறது.  மத்திய கேபினட் அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அதாவது 3-வது இடத்தில் மத்திய விவசாய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் இருந்தார்.  பிரணாப் முகர்ஜி அமைச்சராக இருக்கும்போது கேபினட் அமைச்சரவை கூட்டம் நடந்தால் முதலில் பிரதமருக்கும் அடுத்து இரண்டாவது இடத்தில் பிரணாப் முகர்ஜிக்கும் இருக்கைகள் ஒதுக்கப்படும். அதனையடுத்து 3-வது இடத்தில் சரத்பவாருக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு பிரதமரின் இணையதளத்தில் சரத்பவாருக்கு இரண்டாவது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் அலுவலக இணையதளத்தில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி இரண்டாவது இடத்திலும் சரத்பவார் 3-வது இடத்திலும் இருந்தார். அதனால் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். அதோடுமட்டுமல்லாது அவரும் அவரது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சருமான பிரபுல் படேலும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியது.  இந்தநிலையில் சரத்பவாரை நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அழைத்து பேசினார். அந்த பேச்சுவார்த்தையின்போது தாம் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை சரத்பவார் சுட்டிக்காட்டியதாக தெரிகிறது. இதனையொட்டி தமக்கு ஆலோசனை கூற 3 பேர் கொண்ட கமிட்டியை சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த கமிட்டியானது ஆலோசனை செய்து அரசியல் யோசனையை சோனியாவுக்கு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மோதலை தவிர்க்க சோனியா காந்தி மேற்கொண்ட தந்திரமான நடவடிக்கை என்று பெயர். மேலும் சோனியா கூறாமல் சரத்பவார் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். மத்திய அரசில் எதற்கும் மூலகாரணமாக செயல்படும் சோனியா காந்தி, சரத்பவாரை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்தால் ராகுல் காந்தி பிரதமராக இடையூறாக இருக்கலாம் என்றும் கருதலாம். ஏன்னென்றால் சரத்பவாருக்கு சில முக்கிய கட்சிகளின் ஆதரவு எப்போதும் உண்டு. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சரத்பவார், பிரபுல் படேல் ஆகியோரும் ராஜினாமாவை திரும்பப் பெறு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றும் அதேசமயத்தில் சில பிரச்சினைகள் குறித்து பேசி தீர்வுகாண வேண்டியுள்ளது என்று அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சரத்பவார் சந்தித்ததாக தெரிகிறது. அது எப்படி இருந்தாலும் சரி, ஏ.கே. அந்தோணி மேல் இருக்கும் நம்பிக்கை சரத்பவார் மீது சோனியா காந்திக்கு இருக்காது என்பது உண்மையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்