முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 66 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.2 - மதுரை மாவட்ட துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில்  புதிய வாக்காளர்களாக 66 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சத்து 79 ஆயிரத்து 576 வாக்காளர்கள் இருந்தனர். இதன் பிறகு புதிய வாக்காளர்களை சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய வாக்காளர்களர்களாக சேர்வதற்காக 80 ஆயிரத்து 756 பேர் மனு செய்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்ததில் 66 ஆயிரத்து 347 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 14 ஆயிரத்து 436 தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து 66 ஆயிரத்து 347 பேர் கொண்ட துணை வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று வெளியிட்டார். தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 257 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 10 லட்சத்து 18 ஆயிரத்து 183. பெண்கள் 10 லட்சத்து 188 ஆயிரத்து 74 பேர் ஆகும்.

    பின்னர் கலெக்டர் சகாயம் நிருபர்களிடம் கூறியதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று துவங்கி விட்டது. பூத் சிலிப் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. துணை வாக்காளர் பட்டியலில் உள்ள 66 ஆயிரத்து 347 வாக்காளர்களுக்கும் வரும் 5 ம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும். பூத் சிலிப் வழங்கும் பணிக்காக 2 ஆயிரத்து 110 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கான பூத் சிலிப்பை அரசியல் கட்சிகளும் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதில் சின்னங்கள் இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்