முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லியில் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி,ஜூலை.- 21 - ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழாவின் 5ம் நாளன்று ஐந்து பெருமாளும் ஒன்று சேர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி வழங்கினர். இந்நிகழ்ச்சி விடிய,விடிய நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலில்ஆடிப்பூர தேர்திருவிழா கடந்த 15ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம்தேதி காலைநடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னார் காலை , இரவு வேளைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. விழாவின் மிகவும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சியான 5ம் நாள் கருட சேவை நிகழ்ச்சி 19ம்தேதி காலை துவங்கியது.  ஆண்டாள் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருள அவருக்கு எதிரே பெரியபெருமாள், சுந்தரராஜபெருமாள், திருவேங்கடமுடையான், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் தம்பதிகள் ஒரு சேர நின்று திருப்பல்லாண்டு பாடி மங்கள சாசனம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ஐந்து கருடசேவை நடைபெற்றது. இதில் ஆண்டாள் பிரிய அன்னவாகனத்தில் ரெங்கமன்னார், பெரியபெருமாள், திருத்தங்கல் அப்பன், சுந்தரராஜபெருமாள், திருவேங்கடமுடையான் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி வழங்கி அவர்களுக்கு எதிரே பெரியாழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருளி சேவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகளை ரகுராமபட்டர் மற்றும் முத்துபட்டர், ரமேஷ், கிச்சப்பன், மணியம் ஸ்ரீராம், ஆகியோர் நடத்தி வைத்தனர். விடிய,விடிய இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தக்கார் இரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், வைத்தியநாதசாமி கோவில் செயல் அலுவலர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், ஆய்வாளர் முருகப்பன், நாச்சியார் டிரஸ்ட் ரெங்கசாமி,குருசாமி மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் இரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் மற்றும் அலுவலர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்