முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவியில் 65 கோடிடாலர்வெட்டு

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.- 21 - பாகிஸ்தானுக்கான ராணுவ உதவியில் 65 கோடி டாலரை குறைக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானையும் ஒரு  உறுப்பு நாடாக  சேர்த்துக்கொண்ட அமெரிக்கா அந்நாட்டிற்கு  ஏராளமான ராணுவ உதவிகளை  செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான்  தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு பதிலாக  அவர்களை  ஊக்குவித்து வருகிறது. எனவே பாகிஸ்தானுக்கான ராணுவ உதவிகளை அடியோடு நிறுத்த வேண்டும் என்று  அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தி வருகின்றனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில்  இதற்கான ஒரு தீர்மானத்தை குடியரசு  கட்சி எம்.பி.யான டெட் போ என்பவர்  கொண்டு வந்தார். பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ உதவியில் 130 கோடி டாலரை  கட் செய்ய  வேண்டும் என்று அவர்  தனது  தீர்மானத்தில் கூறியிருந்தார். ஆனால்  அவ்வளவு வேண்டாம் ஓரளவுக்கு வெட்டலாம் என்று ஒருமனதாக முடிவு  செய்யப்பட்டது.அதன்படி பாகிஸ்தானுக்கான உதவிகளை  குறைப்பது  தொடர்பாக ஒரு  சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பாகிஸ்தானுக்கு 65 கோடி டாலர் ராணுவ உதவியை நிறுத்துவதென முடிவு  செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது  பிரதிநிதிகள் சபையில்  குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு காலத்தில்  பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு  உதவிகரமாக இருந்து வந்தது.  ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு விசுவாசம் காட்டாமல் செயல்பட்டு வருகிறது. மேலும் ஏமாற்றும் போக்கிலும்  பாகிஸ்தான் நடந்து கொள்கிறது.  அது மட்டுமல்ல அமெரிக்காவின்  பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.  எனவேதான்  பாகிஸ்தானுக்கான ராணுவ உதவிகளை வெட்ட  தீர்மானம்  கொண்டு வரப்பட்டது என்று டெட் போ கூறினார். பாகிஸ்தானுக்கு  அமெரிக்கா கோடிக்கான டாலரை உதவியாக கொடுத்து வந்தது. ஆனால் அந்த  பணத்தை தீவிரவாதிகளுக்கு  பாகிஸ்தான் செலவிட்டதோடு மட்டுமல்ல அமெரிக்க  படைகளை  தீவிரவாதிகள்  தாக்குவதற்கும் அது  பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான்  பாகிஸ்தானுக்கான ராணுவ உதவியில் இந்த வெட்டு  கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் டெட் போ கூறினார். அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளிவிவகார குழுவில்  டெட் போ ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்