முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுஜிண்டாலை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை. - 22 - பயங்கரவாதி அபுஜிண்டாலை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு வசதியாக பயங்கரவாத தடுப்பு போலீசாரிடம் அவரை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த அபு ஜிண்டால் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை பல்வேறு நகரங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி வந்தனர். ஜூம்மா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அவருக்கு தொடர்புள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அபு ஜிண்டாலிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் வினோத் யாதவ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மகராஷ்டிர மாநிலத்தில் அபு ஜிண்டால் மீது பதிவாகி உள்ள 4 வழக்குகள் தொடர்பாக அவரை மும்பையில் பெருநகர முதன்மை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த வசதியாக மும்பையின் பயங்கரவாத தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்குமாறு வினோத் யாதவ் உத்தரவிட்டார். அபு ஜிண்டாலை நீதிமன்ற அனுமதி பெற்று மும்பை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னர் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதன் பின் மற்ற வழக்குகளில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்டவைக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.  அவுரங்காபாத் ஆயுத கடத்தல், மும்பை பயங்கரவாத தாக்குதல், ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு, நாசிக்கில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகிய வழக்குகளில் அபு ஜிண்டாலிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்ற அனுமதி பெற்று அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்