முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாருதிகார் தொழிற்சாலை 3 வது நாளாக மூடப்பட்டது

சனிக்கிழமை, 21 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

மானேசர், ஜூலை.- 22 - அரியானா மாநிலத்தில் உள்ள மாருதி தொழிற்சாலை நேற்று 3 வது நாளாக மூடப்பட்டது. இதனால் மாருதி கம்பெனிக்கு ரூ. 210 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் மானேசர் என்ற இடத்தில் நாட்டின் மிகப்பெரிய கார் தொழிற்சாலையான மாருதி சுசுகி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதை அடுத்து இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. நேற்று 3 வது நாளாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக மாருதி கம்பெனி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொழிற்சாலையில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறைக்கு காரணமான தொழிலாளர்கள் யார் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் மாருதி கம்பெனிக்கு ரூ. 210 கோடிக்கு உற்பத்தி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த கம்பெனியின் செய்தி தொடர்பாளர் ஒருவர்  கூறினார். மாருதி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 1,600  கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த உற்பத்தி கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் தவிர மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படவில்லை என்று குர்காவூன் நகர போலீஸ் துணை ஆணையர்  தயாள் செய்தியாளர்களிடம்   கூறினார். இந்த வன்முறைக்கு தொழிற்சங்க தலைவர்களும்  தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளுமே காரணம் என்றும்  கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட 91 தொழிலாளர்களும் 14 நாள் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் போலீசார்  தெரிவித்தனர். இது திட்டமிட்டு செய்யப்பட்ட வன்முறை என்றும்  இதில் சமரசத்திற்கு வழி இல்லை என்றும் மாருதி நிர்வாகம்  கூறியுள்ளதாக கூறப்படுகிறது. கதவடைப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து  கம்பெனி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக மாருதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்