முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஜனாதிபதி யார்? இன்று முடிவு தெரியும்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஜூலை.- 22 - ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. நாட்டின்  அடுத்த ஜனாதிபதி யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும். தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.  இதை அடுத்து  புதிய ஜனாதிபதியை  தேர்ந்தெடுக்கப்பதற்கான  தேர்தல்  கடந்த 19ம்   தேதி நடைபெற்றது. இநத தேர்தலில் பாராளுமன்றத்தின் லோக் சபை மற்றும்  ராஜ்ய சபை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களின்  சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள்  ஓட்டு போட்டனர்.  சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர். இந்த  தேர்தலில் காங்கிரஸ்  தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  சார்பில் முன்னாள் மத்திய  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். இதே போல பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட  எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள்  சபாநாயகர்  பி.ஏ. சங்மா போட்டியிட்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் டெல்லி  கொண்டு வரப்பட்டு  ஓட்டு எண்ணும் மையத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். ஆனால் இதில் 72 சதவீத வாக்குகள் அதாவது 8 லட்சம் வாக்குகள்தான் பதிவாகியுள்ளது. இந்த வாக்குகளில்  கூடுலாக பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.  இன்று பிற்பகலுக்கு மேல் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின்  தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது  ஓட்டை  மாற்றி போட்டு விட்டார்.  அதனால்  அவரது ஓட்டு செல்லாது என்று  தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டின்  14 வது ஜனாதிபதியாக வருகிற 25 ம் தேதி பதவி ஏற்பார்.  இந்த பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள்  முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்  இந்தியாவின் முதல் பெண்  ஜனாதிபதி  என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 24 ம் தேதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்