முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூலை.- 22- யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். யோகா குரு பாபா ராம்தேவ்  கறுப்பு பணத்தை மீட்பதற்காகவும் ஊழலுக்கு எதிராகவும் பிரச்சாரம்  செய்து வருகிறார். இவரது நெருங்கிய உதவியாளரான பாலகிருஷ்ணா ஹரீத்துவாரில் உள்ள பதாஞ்சலி யோக பீடத்தின் முக்கிய பொறுப்பாளராகவும் இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை காட்டி  பாஸ்போர்ட் பெற்றதாக எழுந்த புகாரை அடுத்து  பாலகிருஷ்ணா மீது சி.பி. ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு  செய்தனர். இந்த வழக்கில் அவர் மீது சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்யப்பட்டது. இதை அடுத்து  தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு  பாலகிருஷ்ணா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி  செய்த ஐகோர்ட்டு  பாலகிருஷ்ணாவை  கோர்ட்டில்  சரண் அடையும்படி உத்தரவிட்டது. மேலும்  சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராக பாலகிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் பாலகிருஷ்ணா  கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை  அடுத்து பாலகிருஷ்ணாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை  அடுத்து பாலகிருஷ்ணாவை  சி.பி. ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் ஹரீத்துவாரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ணா டேராடூனில் உள்ள சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டில்  ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக சி.பி. ஐ. அலுவலகத்திற்கு  பாலகிருஷ்ணா கொண்டு வரப்பட்டார்.  அப்போது அங்கே பாபா ராம்தேவின் ஆதரவாளர்களும்  பாலகிருஷ்ணாவின்  ஆதரவாளர்களும்  திரண்டு  இவர்கள் இருவருக்கும் ஆதரவாக கோஷம் எழுப்பினர். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராகவும்  அரசுக்கு எதிராகவும்  அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago