முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அன்புமணி மீண்டும் ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 22 - இந்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 10 பேர் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகினர். அவர்களுக்கு அச்சு வடிவில் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதி தல்வந்த்சிங் உத்தரவிட்டார்.  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவ கல்லூரில் கடந்த 2008 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதி அளித்ததாக அப்போதைய மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் மோசடியான ஆவணங்களை தயாரித்து ஊழலில் ஈடுபட்டதாக இண்டெக்ஸ் மருத்துவ கல்லூரி தலைவர் சுரேஷ்சிங் பதோரியா கல்லூரி டீன் டோங்கியா, மருத்துவ துறை இயக்குனர் சக்சேனா, நிதின் கோட்வால், டாக்டர் பவன் பன்சால் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.  இது தொடர்பான வழக்கு நீதிபதி தல்வந்த்சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அன்புமணியின் வழக்கறிஞர் பிரமோத் துபே உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள்  எங்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் அச்சு வடிவில்தான் வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனைவருக்கும் அச்சு வடிவில் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க வேண்டும். அந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி முதல் தொடங்கும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்