முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை கைப்பற்றி இந்தியா சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மும்பை, ஏப். 3 - மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுக்குப் பின் 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இந்தப் போட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் வகையில் விறுவி றுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. இரு அணி வீரர்களும் இறு திப் போட்டிக்கு ஏற்றவாறு மிகுந்த சிரத்தையுடன் ஆடினர். 

இந்திய அணி சார்பில், கெளதம் காம்பீர், விராட் கோக்லி, கேப்டன் தோனி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். பெளலிங்கின் போது, ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்று ம் ஹர்பஜன் சிங் ஆகியோர் நன்கு பந்து வீசினர். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிச் சுற்று ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று பக லிரவு ஆட்டமாக நடந்தது. இதில் முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி சார்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இலங்கை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட் ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

இந்தப் போட்டியில் இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் நன்றாக இருந்தது. கடைசி 10 ஓவர் வரை இலங்கை அணியின் ரன் ரேட் 5 - க்குள்ளாகவே இருந்தது. 

இறுதிக் கட்டத்தில் ஜெயவர்த்தனே, குலசேகரா மற்றும் பெரீரா ஆகி யோர் நன்கு ஆடியதால் அந்த அணி 270 ரன்னைத் தாண்டி கெளரவ மான ஸ்கோரை எட்டியது. ரன் ரேட்டும் 5 -க்கு மேல் உயர்ந்தது. 

இலங்கை அணியின் இன்னிங்சில் ஜெயவர்த்தனே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 88 பந்தில் 103 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம். 

அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் சங்கக்கரா 67 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் யுவராஜ் சிங் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

தவிர, தில்ஷான் 87 பந்தில் 33 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். சமரவீரா 34 பந்தில் 21 ரன்னை எடுத்தார். குலசேகரா 30 பந் தில் 32 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். பெரீரா 9 பந்தில் 22 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர் கான் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பகுதி நேரப் பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஹர்பஜன் சிங் 50 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். 

இந்திய அணி 273 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 277 ரன்னை எடுத்தது. 

இந்திய அணி சார்பில் சேவாக் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். ஆனால் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச் சி காத்திருந்தது. அணி கணக்கைத் துவக்குவதற்கு முன்பாகவே சே வாக் ஆட்டம் இழந்தார். 

இலங்கை வீரர் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2 -வது பந்தில் சேவாக் எல்.பி.டபிள்யு.வாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து காம்பீர் களம் இறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்ப டியாக உயர்த்தினர். 

அடுத்த சிறிது நேரத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்கு காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 31 -க்கு உயர்ந்த போது, 6.1 - வது ஓவரில் டெண்டுல்கர் 18 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

மலிங்கா வீசிய பந்தில் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் கொடுத்து சச்சி ன் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பேரிடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கோக்லி, காம்பீருடன் இணைந்தார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்திய து. அணியை சரிவில் இருந்து மீட்டது. 

ஒரு முனையில் காம்பீர் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் கோக்லி தனக்கே உரிய பாணியில் ஆடினார். இருவரும் விக்கெட்டை பாதுகாத்தவாறு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அணியின் ஸ்கோர் 114 -க்கு உயர்ந்தபோது, ஒரு முனையில் காம்பீரு க்கு பக்கபலமாக ஆடிய கோக்லி, தில்ஷான் வீசிய பந்தில் அவரிட மே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

கோக்லி 49 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இந்த ஜோடி 3 -வது விக்கெட்டிற்கு 83 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, காம்பீர் மற்றும் கோக்லி ஜோடி நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

கோக்லி ஆட்டம் இழந்ததும், கேப்டன் தோனி களம் இறங்கினார். அவர் காம்பீருடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோரும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. 

இதற்கிடையே காம்பீர் சதத்தை நோக்கி முன்னேறினார். அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 3 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்டார். 

இந்திய அணியின் ஸ்கோர் 223 ரன்னிற்கு சென்ற போது, காம்பீர் பெரீ ரா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். அவர் 122 பந்தில் 97 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். காம்பீர் மற்றும் தோனி ஜோ டி இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 109 ரன்னைச் சேர்த்தது. முன்னதாக அவர் 56 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக் கம். 

காம்பீர் ஆட்டம் இழந்ததும், அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் யுவ ராஜ் சிங் களம் இறங்கினார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிலை த்து ஆட, மறு முனையில் யுவராஜ் தனது கணக்கைத் துவக்கினார். 

இதற்கிடையே கேப்டன் தோனி 52 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இது ஒரு நாள் போட்டியில் தோனியின் 38 -வது அரை சதம் என்பது நினைவு கூறத்தக்கது. கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடரில் இதுவரை சரியாக ஆடவில்லை. 

ஆனால் முக்கியமான இந்தப் போட்டியில் பொறுப்புடன் ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அவசரப்பட்டு ஆடாமல் விக்கெட்டை பாதுகாத்தவாறு ஆடினார். 

இந்திய அணி 10.6 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 19.3 ஓவரில் 100 ரன் னை எட்டியது. 29.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. பின்பு 37.5 ஓவ ரில் 200 ரன்னை எட்டியது. 46.2 ஓவரில் 250 ரன்னை எட்டியது. 

இந்திய அணி இறுதியில் 48.2 ஓவரில் 4 விக்கெட்  இழப்பிற்கு 277 ரன் னை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டி யில் அபார வெற்றி பெற்றது. கடைசியில் இந்திய அணியின் வெற்றி ஷாட்டை சிக்சர் மூலம் கேப்டன் தோனி அடித்தார். 

இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்திய அணி வீரர்கள் சாதனை நா யகனான சச்சினை தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். ரசிகர்கள் இதனைக் கண்டு கைதட்டி அவரையும், இந்திய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர். 

இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகி ர்ந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago