முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாருதிகார் தொழிற்சாலையில் கதவடைப்பு வேறுஇடத்திற்கு மாறும்திட்டம் இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.- 23 - வன்முறையால் பாதிக்கப்பட்ட மாருதி  கார் தொழிற்சாலையில் கதவடைப்பு  செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இந்த தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவுமில்லை என்று கம்பெனி நிர்வாகம் அறிவித்துள்ளது. அரியானா மாநிலம் மானேசர் என்ற இடத்தில் நாட்டின் மிகப்பெரிய  கார் தொழிற்சாலையான மாருதி சுசுகி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கும்  நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு வன்முறையாக வெடித்தது.  இதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் மூத்த அதிகாரி ஒருவர்  கொல்லப்பட்டார்.

மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த  தொழிற்சாலை கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 280 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் தொழிற்சாலையை அரியானா மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு  மாற்ற மாருதி கம்பெனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்  வெளிவந்தன.  ஆனால் இதை  இந்த கம்பெனி நிர்வாகம் மறுத்துள்ளது. நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்குரிய சம்பவம். கம்பெனியின் மேலாளர்கள்,  சூப்பர்வைசர்கள், தொழிலாளர்கள்  உயிருடன்  ரிஸ்க் எடுக்க நாங்கள் மேலும்  விரும்பவில்லை என்று  கம்பெனியின் தலைவர் பார்கவா கூறினார். வன்முறைக்கு  காரணம் என்ன வன்முறையை தூண்டி விட்டவர்கள் யார் என்ற உண்மை தெரிய வேண்டும்.   உண்மையை கண்டறிய அரியானா மாநில அரசும்  உரிய நடவடிக்கைகளை எடுத்து உறுதி  கூற வேண்டும். அதுவரை கதவடைப்பு  தொடரும் என்றும் அவர்  கூறினார். மாருதி கம்பெனியில் கதவடைப்பு ( லாக் அவுட் ) செய்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு மாருதி தொழிற்சாலையில் வேலை நிறுத்தங்கள் போராட்டங்கள் நடந்துள்ளன . ஆனால் இந்த அளவுக்கு வன்முறை நடக்கவில்லை என்றும்  அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் உற்பத்தி எப்போது  தொடங்கும் என்று கேட்டதற்கு  விசாரணை முடியும் வரை  எதையும்  சொல்ல முடியாது என்றும் அவர்  கூறினார். இந்த  சூழ்நிலையில் நிதி இழப்பு  ஒரு கவலை அளிக்கும் அம்சமாக இருக்கவில்லை என்றும் அவர்  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்