முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற முகர்ஜிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.- 23 - நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்முகர்ஜி அமோக வெற்றிபெற்றுள்ளார். வெற்றி பெற்ற இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் முகர்ஜிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். தனது பதவி ஏற்பு விழாவிற்கு வருமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரணாப்முகர்ஜி அழைப்பு விடுத்தார். வரும் 25ம் தேதி இவர் பதவி ஏற்கிறார். பிரணாப் முகர்ஜிக்கு மம்தா பானர்ஜியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பதவி ஏற்பு விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  முகர்ஜிக்கு வாக்களித்த அனைவருக்கும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இடது சாரிகளுக்கு காங்கிரஸ் கட்சிதனது நன்றியை தெரிவித்துள்ளது. முகர்ஜி வெற்றி பெற்றதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். தமிழக கவர்னர் ரோசய்யாவும் தனது வாழ்த்துக்களை முகர்ஜிக்கு தெரிவித்தார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் முகர்ஜிக்கு தற்போது வயது 76. தனக்கு வாக்களித்த அனைவருக்கும் முகர்ஜி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இதே போல் பி.ஏ.சங்மாவும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago