முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தின் ஒருகுதி தனியார்மயம் - அஜீத்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 23 - சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் சனிக்கிழமை கூறியதாவது:- சென்னை விமான நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய போதே அதை அரசு - தனியார் ஒத்துழைப்புடன் இயக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சென்னை விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் தன்னால் முழுமையாக நிர்வகிக்க முடியும் என்று கூறியது. எனினும் இப்போது புதிய விமான நிலையத்தை பகுதியளவு தனியார் மயமாக்குவதே சிறந்தது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரதமர் வருகை:  சென்னை விமான நிலையத்தில் ரூ.2,700 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களின் திறப்பு விழாவிக்கு பிரதமர் மன்மோகன் சிங் வர உள்ளார். இந்த விழா 6 முதல் 8 வாரங்களுக்குள் நடைபெறும். அடுத்த 5 ஆண்டுகளில் சிறிய நகரங்களுக்கிடையே விமானப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கும் அரசு முக்கியத் துவம் அளிக்கும், விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த மத்திய திட்டக்குழுவிடம். ரூ.65 ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் விமானப் போக்குவரத்து மேம்படுத்தப்படும் என்றார் அமைச்சர் அஜீத் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago