முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 23 - ஜனாத்பதி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எனவே தாம் நீதிமன்றம் செல்வதை மறுப்பதற்கில்லை என்றும் பி.ஏ.சங்மா கூறியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் இவருக்கு 527 எம்.பி.க்கள் ஓட்டு போட்டுள்ளனர். இதன் மதிப்பு 3,73,116 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மாவுக்கு 206 எம்.பி.க்களின் ஓட்டு கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 1,45,848 ஆகும். 15 ஓட்டுக்கள் செல்லாதவையென அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் ஒன்று முலயாம்சிங் போட்ட ஓட்டாகும். தேர்தல் முடிவு வெளியானதும் பி.ஏ.சங்மா பிரணாப் முகர்ஜிக்கு வாழத்து தெரிவித்தார். தனக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. பா.ஜ.க. கட்சியினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். பின்னர் கூறிய அவர் இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி தேர்தலிலும் நட்த்தை விதிமுறைகள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்திய சங்மா சில மாநிலங்களுக்கு நிதிச் சலுகை தரப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக சலுகைகள் தரப்பட்டுள்ளன. இவை தேர்தலுக்காக தரப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார். வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் கூறிய அவர் முறைகேடுகள் குறித்து தாம் நீதிமன்றம் செல்வதை மறுப்பதற்கில்லை என்றும் கூறினார். அநேகமாக இவர் உச்சநீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்