முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்ஒரு நாள்:இந்தியா 21-ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹம்பன்டோடா, ஜூலை. - 22 - இலங்கை அணிக்கு எதிராக ஹம்பன் டோடா நகரில் நடைபெற்ற முதலாவ து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் கோக்லி மற்றும் சேவாக் அதிரடி யாக ஆடினர். கோக்லி அபாரமாக ஆடி சதம் அடித்தார். சேவாக் 4 ரன் வித் தியாசத்தில் சத வாய்ப்பை கோட்டை விட்டார். ரெய்னா அரை சதம் அடித் தார்.கேப்டன் தோனி பக்கபலமாக ஆடினார்.  பின்பு பெளலிங்கின் போது, இர்பான் பதான், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வி ன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.ஜா ஹிர்கான் மற்றும்ஓஜா இருவரும் பக்க பலமாக பந்து வீசினர்.  இலங்கை அணி தரப்பில் குமார் சங்கக் கரா கடைசி வரை போராடினார். அவ ர் களத்தில் இருந்தவரை வெற்றி மதில் மேல் பூனையாகஇருந்தது. சதமடித்த அவர் 46-வது ஓவரில் ஆட்டம் இழந்த பிறகு தான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது.  இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி அபாரமாக பேட்டி ங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 314 ரன்னை எடு த்தது.  விராட் கோக்லி சதம் அடித்தது. ஆட்ட த்தின் சிறப்பம்சமாகும். இது அவருக்கு ஒரு நாள் போட்டியில் 12 -வது சதமா கும். அவர் 113 பந்தில் 106 ரன்னை எடு த்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம்.  அதிரடி வீரரான சேவாக் 4 ரன் வித்தி யாசத்தில் சதவாய்ப்பை கோடடை விட்டது. ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர் 97 பந்தில் 96 ரன் எடு த்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம்.  தவிர, சுரேஷ்ரெய்னா 45 பந்தில் 50 ரன் னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். கேப்டன் தோ னி 29 பந்தில் 35 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பெரீரா 70 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத் தார். தவிர, குலசேகரா 1 விக்கெட்டை யும், மேத்யூஸ் 1 விக்கெட்டையும் கை ப்பற்றினர்.  இலங்கை அணி 315 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக் கை இந்திய அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 293 ரன்னை எடுத்தது.  இதனால் இந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன் வித்தியாச த்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரி ல் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.  இலங்கை அணி தரப்பில் சங்கக்கரா 128 பந்தில் 133 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். சிறப்பாக ஆடிய அவர் கடைசி வரை போராடி இலங்கை ரசிகர்களை உற்சா  கப்படுத்தினார். தவிர, பெரீரா 44 ரன் னையும், தரங்கா 28 ரன்னையும். குல சேகரா 23 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், இர்பான் பதான் 2 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர். தவிர ஜாஹிர்கான் மற் றும் ஓஜா தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோக்லி தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்