முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ.வுக்கு எதிரான டெஸ்ட்தொடர் ரிக்கிபாண்டிங் புதியசாதனை படைப்பாரா?

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஜூலை. - 22 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நவம்பர் மாதம் நடக்க இருக்கும் டெ ஸ்ட் தொடரில் பங்கு கொண்டு ரிக்கி பாண்டிங் புதிய சாதனை படைப்பாரா?  தென் ஆப்பிரிக்கா அணிக்கும் ஆஸ்தி ரேலிய அணிக்கும் இடையே நவம்பர் மாதம் 3 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.  ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பொறு த்தவரை, முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்குகொண்டு சாதனை படைத்து இரு க்கிறார்.  தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெ ஸ்டிலும் ரிக்கி பாண்டிங் பங்கு கொள் ளும் பட்சத்தில், ஸ்டீவ் வாஹ்கின் சாத னையை அவர் சமன் செய்வார்.  ஸ்டீவ் வாஹ்கின் சாதனையை சமன் செய்ய ரிக்கி பாண்டிங்கிற்கு இன்னும் 3 டெஸ்டுகளே எஞ்சியுள்ளன. இதனை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டி ங் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்க ப்பட்டார். ஆனால் அவர் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆடி வருகிறார்.  பாண்டிங் இதுவரை 165 டெஸ்டுகளில் பங்கு கொண்டு இருக்கிறார். இது முன் னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ்கின் சாத னையை விட 3 குறைவானது என்பது நினைவு கூறத்தக்கதாகும்.  ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக் கா அணிகளுககு இடையேயான டெ ஸ்ட் தொடர் குறித்த பட்டியலை வாரி யம் கடந்த சில நாட்களுக்கு முன்பு  வெளியிட்டது.  பாண்டிங் தனது சொந்த ஊரான ஹோபர்ட் நகரில் ரசிகர்கள் முன்னி லையில் விளையாட இருக்கிறார். இத னைக்காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கோடை காலத்தி ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்று ம் மே.இ.தீவுகள் ஆகிய 3 நாடுகள் சுற் றுப் பயணம் செய்து விளையாட இருக் கின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரே லிய அணிகளுக்கு இடையேயான முத ல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதாநத்தில் நவம்பர் 9-ம் தேதி துவங்குகிறது. 49 வருடங்களுக்கு ப் பிறகு இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதஉள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்