முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் வெற்றி தொடருமா?

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஹம்பன்டோடா, ஜூலை. 24  - இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான 2 -வது ஒரு நாள் கிரி க்கெட் போட்டி இன்று நடக்க இருக்கிறது. இந்திய அணியின் வெற்றிப் பயண ம் தொடருமா? முன்னதாக ஹம்பன்டோடா நகரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

முதல் போட்டியில் இந்திய அணி வெ ற்றி பெற்றதால் இந்தப் போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி கடும் முய ற்சிகளை மேற்கொள்ளும். எனவே இந்தப் போட்டி கடும் சவாலாக இருக் கும். 

இந்திய அணி கேப்டன் தோனி தலை மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஜெயவர்த்த னே தலைமையிலான அணிக்கு எதிரா க விளையாடி வருகிறது. 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி - 20 போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப் பட்டது. இரு அணிகளுக்கு இடையே யான முதல் போட்டி ஹம்பன் டோ டா நகரில் கடந்த 21 -ம் தேதி நடந்தது.  இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் விராட் கோக்லி மற்றும் சேவாக் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

இதனால் இந்திய அணி 314 ரன்னை எடுத்தது. பின்பு ஆடிய இலங்கை அணி 292 ரன்னில் ஆல் அவுட்டானது. எனவே இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றது. 

இலங்கை அணி சார்பில், குமார் சங்கக் கரா கடைசி வரை போராடினார். அவ ர் 133 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் பெரீராவும் அவருக்கு பக்கபலமாக ஆடினார். 

இந்த முதல் போட்டியில் இந்திய அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச் சாளர்களான இர்பான் பதான்,  உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் அபார மாக பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத் தனர். 

இந்நிலையில் இந்தியா மற்றும் இலங் கை அணிகளுக்கு இடையேயான 2-வ து ஒரு நாள் போட்டி ஹம்பன்டோ டா மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்க இருக்கிறது. 

இந்திய அணி தரப்பில் வீரேந்தர் சே வாக், விராட் கோக்லி, சுரேஷ் ரெய் னா, கேப்டன் தோனி மற்றும் கெளதம் காம்பீர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

பெளலிங்கைப் பொறுத்தவரை ஜாஹி ர்கான், இர்பான் பதான், உமேஷ் யாத வ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பந்து வீச அஸ்வின் மற்றும்  ஓஜா ஆகியோர் உள்ளனர். 

இலங்கை அணி தரப்பில் குமார் சங்கக் கரா, சண்டிமால், உபுல் தரங்கா, கேப் டன் ஜெயவர் தத்தனே, திரிமன்னே கபு கேந்திரா ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். 

பெளலிங்கில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா, பெரீரா மற்றும் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பந்து வீச ஹெராத் உள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக் கு இடையேயான இந்த 2- வது ஒரு நா ள் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago