முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு...!

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.24 - பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்று எண்ணெய் கம்பணிகள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலைப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73 ஆக இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என்று கூறி கடந்த 5 மாநில தேர்தலுக்கு பின்னர் ஒரு லிட்டருக்கு ரூ.7.40 பைசாவை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும் கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்ததாலும் விலை உயர்வில் ரூ.2.56 பைசா குறைக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் விலை குறையலாம் என்று நுகர்வோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டியிருந்தனர். 

இந்தநிலையில் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு பதிலாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிக அளவு உயராவிட்டாலும் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது என்று கூறி பெட்ரோல் லிட்டருக்கு 70 பைசாவாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago