முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்சல் கருணை மனு குறித்து கருத்து கூற பிரணாப் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. 24  - பாராளுமன்ற தாக்குதல் வழக்கில்  தூக்கு  தண்டனை பெற்றுள்ள அப்சல் குருவின்  கருணை மனு குறித்து  கருத்து செல்ல புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். கடந்த 2001 ம் ஆண்டு  நடந்த பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு  தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தூக்கு தண்டனையை  ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு அப்சல் குரு கருணை மனு  தாக்கல் செய்துள்ளான்.

இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று  புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு சிவ சேனா கட்சி தலைவர் பால்  தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியிடம் கேட்டதற்கு  நான் முறைப்படி ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் வரை இது குறித்து  கருத்து சொல்ல முடியாது என்றார்.

மேலும் இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால்  இது  குறித்து  ஆய்வு செய்த பிறகே எதையும்  சொல்ல முடியும் என்றும்  அவர்  கூறினார்.

இந்த பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினை  என்பதால்  நான் பொறுப்பேற்ற பிறகே இது குறித்து  முடிவு  செய்ய முடியும் என்றும் அவர்  கூறினார்.

காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளை  சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவாக ஓட்டு இருக்கிறார்கள்.   அது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது  என்றும்  தான் இப்போது எந்த அரசியல்  கட்சியையும்  சாராதவர் என்றும்  எல்லோருக்காகவும் தான் பணியாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

துரு துருப்பான குழந்தையாக இருந்தது முதல்  பல்வேறு பிரச்சினைகளை பார்த்து  நீண்ட பயணத்திற்கு பிறகே  தான் இந்த பதவிக்கு வந்துள்ளதாகவும்   தனது பொது வாழ்க்கைக்கு கிடைத்த மகத்தான பரிசு இது என்றும் அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்