முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் ஊழல்: பணத்தை திருப்பிக் கொடுத்த சவாண்...!

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      ஊழல்
Image Unavailable

மும்பை,ஜூலை.24 - ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழல் அம்பலமானவுடன் முன்னாள் முதல்வர் அசோக் சவாண் தாம் வாங்கிய ரூ.69 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார் என்று குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மும்பையில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மும்பையில் அடுக்கமாடு குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் இதில் வேண்டியவர்களுக்கும் உறவினர்களுக்கும் ஓதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 4 -ம் தேதி சி.பி.ஐ. குற்றச்சாட்டை மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டு இன்று பதிவு செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் ஆதர்ஷ் சொஷைட்டி செயலாளர் தாகூர் என்பவர், மகாராஷ்டிரா அரசுக்கு தவறான வழியை காட்டியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அசோக் சவாண் தன்னுடைய உறவினர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய ரூ.69 லட்சம் வாங்கி உள்ளார். ஆதர்ஷ் ஊழல் அம்பலமானவுடன் அதை அவர் இரண்டு தவணைகளில் திருப்பி செலுத்திவிட்டார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.55 லட்சமும் இரண்டாவது தவணையாக ரூ.14 லட்சமாகவும் திருப்பி செலுத்தி உள்ளார். இதை அவர் எப்படி கட்டினார் என்பதை அறிய வருமானவரித்துறையை கேட்டுக்கொண்டியிருப்பதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரஷ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடரப்பட்டவுடன் அசோக் சவாண் அந்த தொகையை திருப்பி கட்டிவிட்டார் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்