முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி தேரோட்டம்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

ஸ்ரீவில்லி, ஜூலை.24 - ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் ஆடிபூரத் தேரோட்ட திருவிழா நேற்று(23ந்தேதி) சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,ஆனந்தன், இராஜேந்திரபாலாஜி, மாவட்ட நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் திருத்தேர் வடத்தினை பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 15ந்தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. 

இதனை தொடர்ந்து தினம் காலை, இரவு, வேளைகளில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் கடந்த 19ந்தேதி இரவு வெகு சிறப்பாக 5 கருட சேவை எனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆடிபூர தேரோட்ட திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் நேற்று(23ந்தேதி) நடைபெற்றது.

முன்னதாக காலை 4 மணிக்கு ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு புஷ்பங்கி சேவை, வஸ்திரம், சாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஆடிபூர தேரோட்ட திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று(23ந்தேதி) நடைபெற்றது.

முன்னதாக காலை 4 மணிக்கு ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு புஷ்பங்கி சேவை, வஸ்திரம், சாத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கடக லக்கனத்தில் தோளுக்கினியான்களில் சன்னிதியை விட்டு எழுந்தருளி மேள,தாளம் முழங்க பெரிய திருத்தேர்எழுந்தருளினர். 

இதனை தொடர்ந்து காலை 9.05 மணிக்கு துவங்கியது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்ரம், அறநிலையதுறை அமைச்சர் எம்.எஸ்.எஸ்.ஆனந்தன், செய்தி திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரி முத்துராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தேரின் மேல் இருந்த வர்ணனையாளர்கள் ராஜாராம் தர்மராஜ் ஆகியோர் உடனடியாக கோபாலா, கோவிந்தா என கோஷமிட தேரை பக்தர்கள் ஆர்வம் பொங்க இழுத்தனர். தேர் மள,மளவென இழுக்கப்பட்டு தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதிகளில் வழியே வந்து மதியம் 1.35 மணிக்கு நிலையை அடைந்தது.

தேர் திருவிழாவில் ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு வாரிமுத்து பட்டர், ரகுராமபட்டர், ரமேஸ், கிச்சப்பன் மணீயம், ஸ்ரீராம் சுதர்சனபட்டர் ஆகியோர் பூஜைகள் செய்தனர். 

விழாவில் அறநிலைய துறை இணை ஆணையர் தனபால், விருதுநகர் உதவி ஆணையர் மாரிமுத்து , செயல் அலுவலர் குருநாதன், விருதுநகர் மாவட்ட சேர்மன் வசந்தா அழகர்சாமி, சிவகாசி நகர்மன்ற தலைவர் கதிரவன், துணைத்தலைவர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர்மன்ற தலைவர் தனலட்சுமி, துணைதலைவர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்து முருகன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் முத்துராஜ், வத்திராயிருப்பு ஒன்றிய சேர்மன், கனகம்மாள், விருதுநகர் ஒன்றிய சேர்மன் கலாநிதி, விருதுநகர் நகர செயலாலர் எம்.முகம்மது நெய்னார், விருதுநகர் இளைஞரணி செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், அரசு  வழக்கறிஞர் மங்களசாமி, திலகராஜன், மாவட்ட கழக வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், ஆர்.டி.ஓ.(பொறுப்பு)ரங்கன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், கவுன்சிலர் மீராதனலட்சுமி, முருகன்,பசுமை பாரதம், துரைபாண்டியன், ரோட்டரி நிர்வாகிகள் சுப்புராஜ்,சுரேஸ்குமார், கோவில் செயல் அலுவலர்கள் சரவணன், குருஜோதி, வேல்முருகன், பூவையா, சொர்ணமாலை, தேவி, ஆய்வாளர்கள் முருகப்பன், மலையரசு பாண்டியன், அரசு ஒப்பந்தகாரர் குழந்தைவேல் தேசியப்பனை தொழில் அதிபர் தரணிபதி, காளிதாஸ், சந்தனகுமார், மாரிமுத்து,எக்ஸ்னோரா சந்திரன் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அங்குராஜ், பால்ராஜ்,காமராஜ், மாரியம்மாள்,முனியப்பன், நாச்சியார் டிரஸ்ட் ரங்கசாமி, குருசாமி உட்பட ஏராளமான பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தேரோட்டத்தினை முன்னிட்டு ஆண்டாள் பெரியாழ்வார் டிரஸ்ட் மகிசுதாசேவா டிரஸ்ட், பசுமைபாரதம், சர்வோதயா  ஆகிய அமைப்புகள் சார்பில் பக்தர்கள்  தண்ணீர் வசதி, நீர்,மோர் வசதி அன்னதானம் வழங்கப்பட்டது. 

நகர் டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் குருநாதன், மற்றும் கோவில் அலுவலர்கள, திருக்கோவில் பணியாளர்களும் சிறப்புற செய்திருந்தனர்.

 

முதல்வர் பெயருக்கு சிறப்பு வழிபாடு

 

தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆனந்தன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆண்டாள் சன்னிதி சென்று தமிழக முதல்வரின் நட்சத்திரம், பெயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்