முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா

புதன்கிழமை, 25 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூலை. 25 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவர் கோவர்த்தனாம்பிகைக்கு அபிஷேகம் முடிந்து சர்வ அலங்காரமாகி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து உற்சவர் முருகப் பெருமான் சன்னதியில் அம்பாள் எழுந்தருளினார். அங்கு அம்பாள் முன்பு வெள்ளிக்குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜைகள் நடந்தது. சில்வர் படியில் அரிசியும், இரும்பு படியில் நெல்லும் மற்றும் வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை, கருகமணி, வேப்பிலை, மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் ஆகியவை தட்டுகளில் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. யாகசாலை பூஜைகள் முடிந்து தீபாராதனைகள் முடிந்தது. அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் இருந்த நெல், அரிசி ஆகியவை அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புது மாலைகள் அம்பாளுக்கு சாத்துப்படியானது. வெள்ளிக் குடத்தில் இருந்து புனித நீர் அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்